Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

ரொம்ப கடுமையா இருக்கும்….! ”11 மாவட்டம் உஷாரா இருங்க” தீடிர் எச்சரிக்கை …!!

அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் – பாலசந்திரன்

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே நகர்ந்து செல்வதால் மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது. இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

வங்கக்கடலில் உருவானது ”உம்பன் புயல்” வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக்கடலில் ‘உம்பன் புயல்” உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தற்போது புயலாக மாறி இருக்கிறது. இதற்க்கு ”உம்பன்” என பெயர் இடப்பட்டுள்ளது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதற்குப் பிறகு வடகிழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தூத்துக்குடியில் ”புயல் எச்சரிக்கை” கூண்டு ஏற்றம் …!!

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது. இதற்க்கு ஆம்பன் புயல் என  என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை […]

Categories
சற்றுமுன் வானிலை

BIG BREAKING: நாளை ‘ஆம்பன் புயல்’ உருவாகிறது …!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை  உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 17ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு ”ஆம்பன் புயல்” வருமா ? வானிலை ஆய்வு மையம் விளக்கம் ..!!

தமிழகத்திற்கு ஆம்பன் புயல் வருமா ? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தரப்பில் வந்திருக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

14ஆம் தேதியில் இருந்து மேற்கு வங்க கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னனை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக் […]

Categories
சற்றுமுன் வானிலை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள் வானிலை

கடும் வெயிலில் மழை..!”12 மாவட்டங்களுக்கு இருக்கு”.. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இந்த காரணத்தால் பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் கடந்து வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகளால் பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே எங்கும் செல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்த்து விடுகின்றனர். இது மட்டுமின்றி சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையான […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பரவலாக மழை.. மீண்டும் வாய்ப்புள்ளதா.? வானிலை ஆய்வாளர் விளக்கம்..!!

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறுகிறார். பொதுவாக ஏப்ரல் மாதங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்வது வழக்கம். ஆனால் நேற்று அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றை இரண்டு மைய மாவட்டங்கள் குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் இருந்து வட கடலோரம் தொடங்கி டெல்டா மாவட்டம் தென்மாவட்டத்தில் கடலோரம் தவிர, அனைத்து உள்மாவட்டங்களிலும் அதிகபட்ச காற்று குவிப்பின் காரணமாக, […]

Categories

Tech |