கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குத்தளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள், 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]
