அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அப்படி உருவாகவுள்ள புதிய புயலுக்கு ஜாவித் என பெயரிடப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து நாளை புயலாகவும், மேலும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இதையடுத்து […]
