மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது. வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு நாள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளை […]
