கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]
