வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,43,058 ஆகும். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் […]
