கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் அறுவை சிகிச்சைக்குப்பின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் குணமடைந்து வாட்டிகன் திரும்பினார். […]
