முகக்கவசம் அணியாததால் தட்டிக்கேட்ட கடை ஊழியர்களை வாடிக்கையாளர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமழிசை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையில் தேவராஜ் வழக்கம்போல வேலை பார்த்து கொண்டிருந்த போது பிரசாந்த் என்பவர் செல்போன் வாங்குவதற்காக வந்துள்ளார். இதனை அடுத்து பிரசாந்த் அரசு நெறிப்படுத்திய விதிமுறைப்படி முகக்கவசம் அணியாமல் கடைக்குள் நுழைந்துள்ளார். இதனை பார்த்ததும் கடை ஊழியர்கள் முக […]
