தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சின்மயி தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக நேற்று போட்டோவை இணையதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோவை பார்த்த சிலர் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தததா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நான் கர்ப்பமாக இருந்த போட்டோவை […]
