வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் கொல்லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கு கடை நடத்தி வரும் 2 நபர்கள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் வாடகை பணம் செலுத்துமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சந்தைக்கு […]
