இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் தலையணை அருவியும், கோட்டை மலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், மதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,367 பேர். செண்பகவல்லி […]
