உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்களாக போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டு வருகின்றது. இதற்கிடையே, போரில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ள ரஷ்யா, இது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக […]
