வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த கலெக்டரின் காரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம் தனியார் பள்ளியில் பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதற்கு அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு வேட்பாளரின் முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீடு இருக்கிறது . அந்த வீட்டின் […]
