உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “பாஜக பின்னடைவில் உள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதபடுத்துவதற்காக ரகசிய உத்தரவு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்து, தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களில் […]
