வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் திமுக நிர்வாகிகள் உட்பட வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. வாக்கு சாவடி மையங்களுக்குள்ளாக அந்த மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அல்லது பக்கத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட தற்போது பதவியில் இருக்க கூடிய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களோ, உள்ளாட்சி பிரதிநிதிகளும் கூட்டுறவு அமைப்பில் இருக்கக்கூடிய பிரதிநிதிகளோ வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளாக அனுமதிக்கபடக்கூடாது. கட்டாயமாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. […]
