ஹிமாச்சலபிரதேச மாநிலத்தில் இப்போது பா.ஜ.க-வின் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இப்போது அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கின்றனர். காங்கிரஸ் சென்ற வெள்ளிக்கிழமையன்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த சூழ்நிலையில், இன்று பா.ஜ.க தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நடந்திருக்கும் பலவற்றையும் குற்றச்சாட்டுகளாக மக்கள் முன் வைத்துள்ளனர். […]
