தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நெல்லை மாநகராட்சி ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் தலைமையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி மற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி […]
