சென்னையில் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை […]
