வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் புதிய காலனி பகுதியில் மதுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது அவர் வசிக்கும் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வீடு வீடாகச் சென்று மது பணம் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். […]
