எரிபொருள் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எரிபொருள் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெட்ரோல் பங்கில் முறையாக பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால், வாகன ஓட்டிகள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. […]
