விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள், எம்சாண்ட் போன்ற கனிமவளங்கள் தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அவ்வாறு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையே விட கூடுதலாக ஏற்றி செல்வதனால் தினசரி வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அழகியமண்டபம் அருகில் கல்லுவிளையில் அதிக எடையுடன் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து […]
