வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகில் வயலாமூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் கூலித்தொழிலாளி முத்து (27). முத்துவிற்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு பைக்கில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்துவின் மோட்டார் வாகனத்தின் மீது […]
