ஏமனில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது வெடிகுண்டு இருக்கும் வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனின் ஏடன் எனும் நகரத்தில் பாதுகாப்பு படையினரினுடைய வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வெடிகுண்டுகள் இருக்கும் வாகனம், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் மற்றும் பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலை மேற்கொண்டது […]
