சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வள்ளுவர் கோட்டம் சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் […]
