கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, காவலர்கள் மீது கற்களை வீசி எறிந்த வாலிபர்கள் சிலரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். […]
