கேரளா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் எதிரொலியாக, புளியரை சோதனை சாவடி வழியாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி, புளியரை சோதனை சாவடியில், கால்நடை துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சலுக்கான […]
