கரும்பு லாரியை யானைகள் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலையை நோக்கி சென்றது. இந்த லாரி காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு அருகே சென்றது. அப்போது குட்டியுடன் சென்ற யானை திடீரென லாரியை வழிமறித்தது. இந்த யானை தன்னுடைய குட்டியுடன் லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி தின்றது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]
