கணவன்-மனைவியை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணனும், வசந்தியும் கடந்த 2-ந்தேதி மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கி வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் […]
