ராணிபேட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேல் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயற்சி […]
