தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடாக அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பண்டிகை நாட்களிலும் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த […]
