இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவிகளை நவராத்திரியின் 9 தினங்களுக்கும் விரதம் இருந்து பக்தியோடு பூஜித்து நெய்வேத்தியம் படைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். […]
