அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு தொடர்பில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் ஹால் டிக்கெட்டுகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்வை எழுத வேண்டும். தேர்வு நுழைவு சீட்டில் பாடங்கள் மற்றும் பெயரில் பிழைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க […]
