ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொரோனா நெருக்கடி காலத்திலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகையிலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டாய முக கவசம் அணிதல், போதிய இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை பாதுகாவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலிலும் […]
