பிரபல நாட்டில் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மலாங் மாகாணத்தில் அமைந்துள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல அணிகள் கலந்து கொண்டனர். ஆனால் இறுதியில் அமரோ என்று அழைக்கப்படும் உள்ளூர் அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் தன் சொந்த மண்ணில் தாங்கள் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அந்த அணியின் தீவிர ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். […]
