பெங்களூருவில் கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் சிக்கியது தொடர்பான வழக்கில் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகினி திவேதியின் நண்பன் ரவிசங்கரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் ராகினி திவேதியின் […]
