Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர்…. லாரியில் மோதி விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

ஓட்டப்பிடாரம் அருகே நின்று கொண்டிருந்த  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவடடம் ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள கீழசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ஆவார். இவருக்கு 27 வயதான மாரிமுத்து என்ற மகன் இருந்தார்.அவர்  அரசடியில் மோட்டார் மெக்கானிக் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இந்நிலையில்  அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரான சக்கையா என்பவரின் மகனான 25 வயது அருணும், மாரிகண்ணன் மகன் 21 அரசமுத்து ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள்…. வெங்கடாசலம் மீது வனத்துறை வழக்கு பதிவு!!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஆவார்.. 2019ஆம் ஆண்டு முதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வந்தார். இந்த சூழலில் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச்சலம் லஞ்சமாக பெற்றதாக வந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குப் பதிவு..!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.. பள்ளி மாணவி மற்றும் பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.. தற்போது 5 வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது..

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…. போலீசார் அதிரடி….!!!

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நடிகை யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்த கொடூர விபத்து.. மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்கு..!!

பிரிட்டனில் சாலை ஒன்றில் கொடூர விபத்து நடந்ததை மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் M6 என்ற மிக பெரிய சாலையில், கடந்த 8 ஆம் தேதி அன்று மூன்று லாரிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு நபர் உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் காரணமாக இச்சாலையின் தெற்கு பகுதி சுமார் 17 மணி நேரங்களுக்கு அடைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொடூர விபத்தை, அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தள்ளாடிய நிலையில் வந்த ஆட்டோ… மடக்கி பிடித்த தாசில்தார்… அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரத்தில் தாசில்தார் ரோந்து பணிக்கு சென்ற போது மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டியவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தாசில்தார் பரணிகுமார் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள முடுக்கு ரோடில் ஆட்டோ ஒன்று நிலை தடுமாறியதுபோல் வந்துள்ளது. இதனையடுத்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் நடத்திய சோதனையில் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் தலைமையில் வழங்க வேண்டும்… தகராறு செய்த திமுக பிரமுகர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கண்ணையா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய செயலாளர் அய்யனார் என்பவர் ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அப்போது ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய்யும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அய்யனார் எனது தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்குவோர் மீது…. வழக்குபதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.  அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. களப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்குகிறது. இந்நிலையில் மருத்துவர்களைத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லுறது… தடையை மீறினால் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…!!

 முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கோட்டப்பட்டி போன்ற பகுதிகளுக்கு உட்பட்ட அரூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்த 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சமூக இடைவெளி இன்றியும் மற்றும் முககவசம் அணியாமலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடதகராறு காரணமாக… ஒருவரை 3 பேர் தாக்கிய சம்பவம்… போலீசார் தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இடதகராறு காரணமாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் லக்ஷ்மிநாராயணன்(41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகையா பாண்டியன்(27) என்பவருக்கும் இடையில் இடதகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து முருகையா பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களான உலகநாதன்(36), ரூபன்(32) ஆகியோருடன் இணைந்து லக்ஷ்மிநாராயணனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லக்ஷ்மிநாராயணனை அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா…? 151 நபர்கள் மீது வழக்கு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முகவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 151 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 151 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் அவர்களை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செயல்பட்டவர்கள்… 264 பேர் கைது… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 264 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மதுபானக் கூடங்கள், மது கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவற்றை தர்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய செயல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் சுற்றித்திரிந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணியாரம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உலகம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ( 23 ), மணியாரம்பட்டியைச் சேர்ந்த சிவா ( 23 ) ஆகிய இரண்டு பேரும் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறையை மீறி வெளியில் சுற்றியிருந்த 2 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே சத்திரம், புழுதிபட்டி ஆகிய பகுதியில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புழுதி பட்டியை சேர்ந்த அருண் ( 20 ), தர்மபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ( 21 ) ஆகிய 2 வாலிபரும் காரணம் இல்லாமல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்திருக்காங்க..! விதிமுறைகளை மீறிய ஆர்ப்பாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக உலகம்பட்டி காவல்துறையினர் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சின்னையா, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற சந்தோசம்… தடையை மீறி கொண்டாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தி.மு.க.வினர் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டியில் உலகம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுகுடிபட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், திருவாழ்ந்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாதவன் மற்றும் சிலர் திமுக கட்சியின் வெற்றியை தடையை மீறி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அதனை தொடர்ந்து செந்தில்குமார், மாதவன் மற்றும் சிலர் மீது உலகம்பட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடத்திட்டாங்க..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியது தொடர்பாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்துறாங்க..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 19 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கொரோனா பரவி வரும் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அமலில் இருந்த முழு நேர ஊரடங்கை மீறிய 1,326 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழுநேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி கொடுமை படுத்துறாங்க…! பெண் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூரில் சீதாலட்சுமி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரில் வசித்து வரும் பழனிவேல் (31) என்பவருக்கும் காலேஜ் படிக்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கணவன் குடும்பத்துடன் வசித்து வந்த சீதாலட்சுமியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்… இருதரப்பினர் பரபரப்பு புகார்… காவல் துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலாயூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிப்பது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இரு தரப்பினரும் மோசமாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து பெரியசாமி மகன் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்.. இரத்தம் வடிய அலறிய பரிதாபம்..!!

கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடகரை என்ற பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் ஸ்கூட்டரின் பின் அவர்களது வளர்ப்பு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த நாய் கீழே விழுந்துள்ளது. மேலும் அதனை இழுத்து சென்று கொண்டே சென்றதால் உடல் முழுக்க  காயமடைந்து நாயின் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதித்திருந்தும்… இப்படி பண்ணிட்டாங்க… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 6 பேர் மீது தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அதனை தடுத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடிக்கு அருகே நடந்த சம்பவம்… கையும் களவுமாக பிடிபட்டவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அதிமுக கிளைச் செயலாளர் பெரியசாமி உட்பட நான்கு பேர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரையும் அரும்பாவூர் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒரு சின்ன பிரச்சனை தான்… தாய்-மகனை சரமாரியாக தாக்கிய சிறுவன்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட 4 பேரை தாக்கிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வெள்ளாளர் தெருவில் நிறுத்தி விட்டு வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அருண்குமாரின் மோட்டார் சைக்கிளின் மீது அதே ஊரை சேர்ந்த 18 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை கொண்டு லேசாக மோதியுள்ளான். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு… இருதரப்பினரிடையே பயங்கர மோதல்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 51 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசகுளத்தில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். மானாமதுரை பைபாஸ் ரோட்டில் வசித்து வரும் முருகேசனுக்கும், இவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வாக்குச்சாவடியில் சட்டமன்ற தேர்தலில் பணியில் ஈடுபட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் இருவரது ஆதரவாளர்களும் தாக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல்… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தி.மு.க.-அ.தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட துணை செயலாளராக அதிமுக ஜெயலலிதா பேரவையில் உள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பதில் திமுகவினரும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தேர்தலன்று ராமகிருஷ்ணன் வயல்சேரியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டாங்க..! இருதரப்பினர் பரபரப்பு புகார்… மொத்தமாக தூக்கிய காவல்துறை..!!

சிவகங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாலை கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தழகு என்பவருக்கு காளை என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகனை சம்பவத்தன்று ஒரு சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதேபோல் காளையின் உறவினரான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கண்டனி கிராமத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்டி தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் தேர்தல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரச்சாரத்தில் இப்படி பேசிட்டாரு… பெரம்பலூரில் பரபரப்பு புகார்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் பிரச்சாரத்தின் போது தரக்குறைவாக பேசிய ஆ.ராசா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான ஆர்.ராசா எம்.பி., தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள் ஹைதராபாத்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம்… மீறினால் நடவடிக்கை பாயும்… காவல்துறை எச்சரிக்கை..!!

பெரம்பலூர் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தல், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு முறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் […]

Categories
உலக செய்திகள்

“வாரத்தில் 2 முறை மட்டுமே குளிக்க வேண்டும்”… இருட்டு அறையில் தான் இருக்க வேண்டும்… தந்தையின் கொடூர செயல்..!!

பிரித்தானிய நாட்டில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானவர் தன் குடும்பத்தினரை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் சாப்பிடும் நேரத்தை தவிர மற்ற நேரம் இருண்ட வீடு தான் இருக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த  கொடுமைக்கார தந்தை 56 வயதுடைய ரச்சித் கத்லா  இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இவர் தேர்வு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என்றும், வேறு விளம்பர நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்க மாட்டார் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது FIR… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது அரியானா போலீசார் பரபரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் 8 மாதங்களுக்கு முன்பு இந்திய வீரர் யுகேந்திர சாஹல் குறித்து ஒரு வீடியோவில் கிண்டலடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது அவர் தலித் சமூகம் குறித்தும் அனாகரிகமான வார்த்தையை பயன் படுத்தியதாக 153, 153 ஏ, 295, 505 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து உயிரிழந்த தொழிலாளி …. தரகம்பட்டி அருகே சோகம் …!!

தரகம்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்த உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் வசித்து வரும் லட்சுமணன் மகன் சக்திவேல். 45 வயதுடைய இவர்  ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த சில தினங்களாக தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு….. விரக்தி அடைந்த கணவன்… எடுத்த விபரீத முடிவு..!!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கஜேந்திர ராவ் (வயது 57)  இவருக்கும் அவரது மனைவி லட்சுமிபாய்க்கும் இடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் விரக்தி அடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திருமாவளவன் மீது வழக்கு பதிவு – முக.ஸ்டாலின் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று சமூக தளங்கள் எல்லாம் கருத்துகள் வந்தன. இந்த நிலையில் தன்னுடைய ஆதரவை திருமாவளவனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு …!!

விவசாயிகள் குறித்து விமர்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனவத் மீது நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய போது ஒரு சிலர் அது தொடர்பான தவறான கருத்தைப் பரப்பினர். அதனால் தேசிய அளவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதைப் போன்றே தற்போது வேளாண் சட்ட மசோதாக்கள் மீது சிலர் தவறான பரப்பி கலவர சூழலை ஏற்படுத்துகின்றனர். கலவர சூழலை ஏற்படுத்தும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற பெண் தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம்- வழக்கு பதிவு

கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் துணைத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலில் வகுப்பைச் சேர்ந்த திருமதி. இராஜேஸ்வரி இருந்து வருகிறார். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது திருமதி. ராஜேஸ்வரி தரையில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. தெற்கு திட்டாய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 தடையை மீறி… கிராமசபை கூட்டம்… ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு…!!!

தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் என்ற ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து மற்றும் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…203 பேர் மீது வழக்குப் பதிவு… உத்திரபிரதேச போலீசார் அதிரடி…!!!

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் […]

Categories
உலக செய்திகள்

கலவரத்தை தூண்டிய நவாஸ் ஷெரீப் மகள்…வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்….!!!

விசாரணைக்கு ஆஜராக வந்த சமயத்தில் கலவரத்தை தூண்டியதால் நவாஸ் ஷெரீப் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான  நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (46), தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவர் சட்ட விரோதமான முறையில் நிலம் கைப்பற்றியதாக புகார் எழுந்ததுள்ளது. அது பற்றி அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு லாகூரில் லஞ்ச ஊழல் தடுப்பு படையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் சென்ற 11-ஆம் தேதி அங்கு […]

Categories
உலக செய்திகள்

கொலை முயற்சி?… பிரதமர் வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்து சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடா பிரதமரை கொலை செய்ய முயற்சித்தே அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  கடந்த வாரம் வியாழன்கிழமை அன்று கனடா பிரதமர் வீட்டின் காம்பவுண்ட் கதவை Hurren என்பவர் தனது டிராக் மூலம் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் இரண்டு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பட்ட பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதமர் ஜஸ்டினின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக அச்சமயம் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளனர். கனடிய பத்திரிகைகள் சில நீதிமன்றத்தில் இது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முக கவசம் போடல…. 73 ஆயிரம் பேர் மீது வழக்கு…. ரூ. 3.65 கோடி வசூல் …!!

தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து காவல்துறையினர் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீதும், வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்திய இந்தியருக்கு சிறை தண்டனை …!!

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்திற்கு இந்தியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்காவில் கொரோனா தொற்று  பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியரான ராஜிந்தர் சிங் என்பவர் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை பயன்படுத்தி பொருட்களை 200% விலைகளை உயர்த்தி மக்களிடம் விற்பனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிவு …!!

நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்  கடந்த  பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா பற்றி வதந்தி – மாரிதாஸ் மீது வழக்கு பதிவு ….!!

கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்த நிலையில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 5ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7ஆகவும் இருந்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் வதந்திகளும் பரவியது. இதனை கட்டுபடுத்த மத்திய மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆங்கங்கே வதந்தி பரப்பியவர்களை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 4,100 பேர் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், சிலர்  இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை போலீசார் தோப்பு கரணம் போட […]

Categories

Tech |