கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பங்கஜ் காசன் நீலம்முரி என்பவரின் மனைவி உஷா. இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்து நேற்று 15 பேருடன் வேனில் தேனீக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்நிலையில் வேனில் இருந்த அனைவரும் காப்பாற்றுங்கள் என […]
