முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட அவரது மருமகனின் சகோதரர் மகேஷுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கால் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி தனது நற்பெயரும், நன்மதிப்பும் கெட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
