தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரத்தில் பரி.பவுலின் ஆலயத்திற்கு முன்புறமுள்ள இடத்தில் டேனியல் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் பா.ஜனதா கட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மெய்ஞானபுரம் கிறிஸ்தவ பொது மகிமை சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டால் தங்களது வழிபாட்டிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
