மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும் மறையாது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த இந்நாள் சரித்திரத்தின் பொன்நாள் ஆனது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் தொடர்ந்த போது குடும்பத்தில் நிலவிய வறுமை பள்ளிக்குச் செல்ல விடாமல் நாடகத்துறையை நோக்கி ஈர்த்தது. தேசபக்தி நாடகங்களில் புராண இதிகாச நாடகங்களிலும் நடித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்ட புரட்சித்தலைவர் 1936-ம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கி […]
