வீட்டில் பலர் செல்லப் பிராணிகளை வளர்த்து வருவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ஒரு பெண்மணி செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். அந்தப் பன்றியின் பெயர் லிபியா. 3 வயதுடைய அந்தப் பன்றி ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனிகளை சாப்பிடுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். அந்தப் பன்றி சிறிய வகை இனத்தை சேர்ந்தது என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் […]
