தமிழகத்தில் 40% குழந்தைகள் வளர்ச்சி குறைவாக பிறப்பதாக WHO அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பிறந்த குழந்தையின் எடை சராசரியாக 2.5 கிலோவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 40 சதவீதம் குழந்தைகள் 2 முதல் 2.2 கிலோ எடையுடன் தான் பிறக்கின்றன. குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைய 37 முதல் 40 வாரங்கள் வரை ஆகும். 28 முதல் 34 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். […]
