வருகின்ற நிதியாண்டில் 7,500 குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்பு கட்டித் தரவேண்டும் என்று திமுக உறுப்பினர் ஆர்.டி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரை தொடர்ந்து மற்றொரு திமுக உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பரசன் கூறிய பதிலில், “சிதிலம் அடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்யும்போது அதிகப்படியான குடியிருப்புகள் […]
