பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது இந்த புகாரின் பேரில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சீர்காழியில் உள்ள வயல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் ஆக்கூர், […]
