நெல்லையப்பர் கோயிலில் நிகழும் அதிசயத்தை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து மனம் உருக வேண்டி செல்கின்றனர். தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். தமிழகத்திலேயே மூன்று மூலவர்களை கொண்ட திருக்கோயிலாக நெல்லையப்பர் கோயில் மட்டுமே இருக்கிறது. மூலவரான வேண்ட வளர்ந்த நாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த கோவிலுக்குள் சிவ லிங்கத்தின் மத்தியில் அமைப்பின் […]
