கோவையில் நடிகர் அஜித்குமார் நடித்த “வலிமை” திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். […]
