ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]
