வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]
