திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் அங்கு இருக்கின்ற மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் வரும் வாகனங்களை எதிர்நோக்கி உணவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் காய்கறி மற்றும் […]
