மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அரியானா […]
